2025 மே 19, திங்கட்கிழமை

கிழக்கில் முதல் தொகுதி இந்திய வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்

இந்திய உதவியுடனான வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  முதல் தொகுதி வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளிக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை (25) நடைபெற்றது.

இதன்போது, 25 வீடுகளை   பயனாளிகளிடம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா   கையளித்துள்ளார்.
இதற்கான நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் கதிரவெளிக் கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய உதவியுடனான வீட்டுத்திட்டத்தின் கீழ், 4,000 வீடுகள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,880 வீடுகளில் 1,602 வீடுகளின் நிர்மாணப்பணிகள்  பூர்த்தியடைந்துள்ளன. வாகரை பிரதேசத்தில் மட்டும் 394 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.  இவற்றில் 294 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X