2025 மே 19, திங்கட்கிழமை

காணிப்பயன்பாட்டு வரைபடம் தயாரித்தல் தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 25 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, மாவட்ட காணிப் பயன்பாட்டு வரைபடம் தயாரித்தல் தொடர்பாக பிரதேச காணிப் பயன்பாட்டு பங்காளர்களுக்கான கூட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) மாலை  நடைபெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, ஏறாவூர் நகர பிரதேச செயலக பரிபாலனத்தின் கீழுள்ள சுற்றாடல் வளங்கள், காணிப்பயன்பாடு குறித்த விடயங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் ஆராயப்பட்டதாக காணிப்பயன்பாட்டு உத்தியோகஸ்தர் மல்லிகா தாஹிர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலக பரிபாலனத்தின் கீழ் வரும் மிச்நகர், மீராகேணி, ஐயங்கேணி முஸ்லிம் பிரிவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,980 குடும்பங்களின் காணிப்பயன்பாடு மற்றும் அங்குள்ள சுற்றாடல் வளங்கள் தொடர்பில்; ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினதோ அல்லது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினதோ காணிப்பயன்பாட்டு வரைபடத்தில் உள்ளடக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கரிசனை வெளியிடப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பில்  அரசாங்க அதிபரின் கவனத்துக்கு  கொண்டுவரப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, மட்டக்களப்பு மாவட்ட பயிராக்கவியல் உதவிப் பணிப்பாளர்  எம்.கிருபாமூர்த்தி, ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டு உத்தியோகஸ்தர் மல்லிகா தாஹிர், மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் அதிகாரி எம்.அப்துல் மஜீத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X