Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 25 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் மட்டக்களப்பில் இன்று (25) திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வீதியில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வையொட்டி மர நடுகையும் இடம்பெற்றது.
இந்த அலுவலகம் மாகாண அமைச்சின் 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் உட்பட அமைச்சின் அதிகாரிகள், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .