Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 26 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தொப்புள்கொடி உறவு கொண்டுள்ள இலங்கை மக்கள் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்றில்லாமல் பொதுவாக இலங்கை மக்களுக்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கும் உதவுவதற்கு இந்தியா என்றைக்கும் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார்.
இந்திய உதவியுடனான வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் தொகுதி வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளிக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை (25) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'சிங்கள மக்களுக்கு இந்தியாவிலுள்ள எனது பிறப்பிடமான பீகார் மாநிலத்துடனும் தமிழ் மக்களுக்கு தென்னிந்தியாவுடனும் முஸ்லிம் மக்களுக்கு இந்தியாவுடன் தொப்புள்கொடி உறவு இருக்கின்றது.
இலங்கையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. இலங்கை ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உட்பட நான்கு உயர்மட்ட இராஜதந்திர விஜயங்கள், பரஸ்பரம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளன.
ஊவா மாகாணத்திலும் வடக்கிலும் கிழக்கிலுமாக 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தையும் இந்தியா முன்னெடுத்துள்ளது.
2012ஆம் ஆண்டு வடக்கில் ஆயிரம் வீடுகள் மாதிரி வீடமைப்புத்திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 45,000 வீடுகளை நிர்மாணிக்கும் கட்டத்தின் கீழ் மஹாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 திகதி ஆரம்பித்தோம். இப்பொழுது வடக்கிலும் கிழக்கிலும் 26,750 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகளை இந்த வருட இறுதிக்குள் முடித்துவிடுவோம். 4,000 வீடுகள் பதுளையிலும் நுவரெலியாவிலும் கட்டிமுடிக்கும் திட்டமுள்ளது.
அத்துடன், 15 முச்சக்கரவண்டிகளை யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களுக்கு வழங்கியுள்ளோம். ஒந்தாச்சிமடத்திலும் வந்தாறுமூலையிலுமுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு பஸ்களை வழங்கியுள்ளோம்.
மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ்; நஸீர் அஹமட் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கில்; பாரிய தொழிற்பேட்டைகளை ஆரம்பித்து வாழ்வாதார திட்டங்களையும் தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுக்கவும் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். குறிப்பாக நன்னீர் மீன்பிடி, விவசாயம், வாகன உதிரப்பாகங்கள், மருந்துப்பொருட்கள் உற்பத்தி, கிராமிய பொருளாதார அபிவிருத்தி, விவசாயம், உற்பத்தித் தொழிற்றுறை என்பவற்றின் மூலம் கூடியளவு தொழில்வாய்ப்புக்களை உருவாக்கமுடியும். இந்த நிலையில், கிழக்கு மாகாணத்துக்கான பல்வேறு தொழிற்றுறைகள் சார்ந்த நீண்டகாலத்திட்டங்களின் முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக நாம் கோரியுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .