Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 26 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலக கலை இலக்கிய பெரு விழா எதிர்வரும் 27ஆம் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக ஏறாவூர் கலாசாரப் பேரவையின் தலைவரும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளருமான எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடத்தப்படும் வருடாந்த கலை இலக்கிய விழா வெள்ளியன்று மாலையும் 'இனசமதி' சிறப்பு மலர் வெளியீட்டு இலக்கியப் பெருவிழா சனிக்கிழமையன்று மாலையும் ஏறாவூர் வாவிக்கரை சிறுவர் பூங்காவில் நடைபெறவுள்ளன.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலை நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.கிரிதரன், மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட இன்னும் பலர் அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை இலக்கியப் பெருவிழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், மாகாணசபை உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கலை இலக்கிய நயம்மிக்க இந்தப் பெருவிழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்துறை சார்ந்த எட்டு கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .