2025 மே 19, திங்கட்கிழமை

உணவு ஒவ்வாமையால் 45 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 26 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 45 பேர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வியாழக்கிழமை (26) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.

தாழங்குடாப் பிரதேசத்தில் திருமண வீடொன்றில் புதன்கிழமை (25)  நண்பகல் வழங்கப்பட்ட உணவை  உட்கொண்டவர்களில்  சிலர் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டனர்.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றினால் இவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மண்முனை மற்றும் தாழங்குடா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்கள், பெரியோர்கள்,குழந்தைகள் எனப் பலரும் அடங்குகின்றனர்.   

இவர்கள்  ஆபத்தான நிலையில் இல்லை எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X