Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 27 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
தபால் திணைக்களம், பொதுமக்களுக்கு இலகு சேவையை வழங்கும் நோக்கோடு அஞ்சற்;காரர்களை கணினி வலைப்பின்னலுடன் இணைத்துள்ளதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம், மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.
தபால் வியாபார மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், வீட்டில் இருந்தவாறே தபால்களை வீட்டுக்கு கொண்டுவரும் தபால்காரனிடம் எதுவித மறைமுகக் கட்டணங்கள் இன்றி மின்சார, ஸ்ரீலங்கா ரெலிகொம், மொபிடல் பட்டியல்களை செலுத்துதல் மற்றும் மொபிடல் மீள்நிரப்பும் பணியையும் செய்யமுடியும் என கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபர் வி.விவேகானந்தலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிரதம தபால் நிலையத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம், இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைவரையும் மற்றையது ஊறணி சந்திவரையும் சென்று திரும்பின.
ஊர்வலத்தின்போது வீதிகளில் பயணித்தோரிடம் தபால் வியாபார மேம்படுத்துதல் திட்டத்தின் வசதிகள் பற்றிய விரங்கள் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தபால் திணைக்களத்தின் பிராந்திய அத்தியட்சகர் எஸ்.ஜெகன், பிரதம தபால் அதிபர் எம்.ஜெயரட்ணம், பிராந்திய நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.தம்பிராஜா, தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் எஸ்.சுபேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago