2025 மே 19, திங்கட்கிழமை

மட்டு. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 27 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட ஊழியர்கள்,  சம்பள உயர்வு கோரி இன்று வெள்ளிக்கிழமை காலை பணிப்பகிஷ்;கரிப்பில் ஈடுபட்டனர்.

தமக்கான சம்பளம் தற்போது 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும்,  இந்த சம்பளத்தை 40 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டுமெனக் கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் தேசிய நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு, கல்லடி முகாமையாளர் அலுவலகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடமையாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இருந்தபோதிலும்,  நீர்ப்பம்பி இயக்குநர்கள் கடமையில் ஈடுபட்டதாக அதன் ஊழியர்கள் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X