2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை தர நிர்ணய பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை தர நிர்ணய பணிப்பாளர் சபை உறுப்பினராக மட்டக்களப்பு மத்திய முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல். ஜெய்னுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க, கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதீயுதீனால்; இலங்கை தர நிர்ணய பணிப்பாளர் சபை உறுப்பினராக இவர்; நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் வெள்ளிக்கிழமை (27) ஏறாவூரிலுள்ள பிரதி தவிசாளரின் அலுவலகத்தில் வைத்து, கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X