2025 மே 19, திங்கட்கிழமை

பழுதடைந்த சமோசா விற்ற சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

Princiya Dixci   / 2015 மார்ச் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்;.எஸ்.எம்.நூர்தீன்

மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த சமோசாவை விற்பனை செய்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர், ஞாயிற்றுக்கிழமை (29) செய்யப்பட்டதுடன் குறித்த சிற்றுண்டிச்சாலை சுகாதார அதிகாரிகளினால் சீல்வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை பொது சுகாதார பிரிசோதகர் கே.தேவநேசன் தெரிவித்தார்.

குறித்த சிற்றுண்டிச்சாலையில் சமோசாவைச் சாப்பிட்ட பாடசாலை மாணவி சுகவீனமுற்றதையடுத்து மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிறுவர் வைத்திய நிபுணரான மேற்படி மாணவியின் தாய் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலையை சுகாதார அதிகாரிகள் முற்றுகையிட்டபோது பல நாட்களுக்கு முன்பு தயாரித்த பழுதடைந்த மனித பாவனைக்குதவாத சமோசாக்கள் கைப்பற்றப்பட்டன.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளரான சந்தேக நபரை, மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில், திங்கட்கிழமை (30) ஆஜர் செய்யப்பட்டபோது ரூபாய் 50,000 சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X