2025 மே 19, திங்கட்கிழமை

'இன ஒற்றுமை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 31 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தற்போதைய நல்லாட்சியில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் பணியாற்றக்கூடிய சூழல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில்,  இனங்களை ஒற்றுமைப்படுத்தும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடாத்தொகுதி பிரதம அமைப்பாளர் ஏ.ரி.மாசிலாமணி தெரிவித்தார்.

ஏறாவூர் 4ஆம் குறிச்சியில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  52 குடும்பங்களுக்கு குடிநீர்  பெறுவதற்கான சுமார் 5 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேயம் மக்கள் மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏறாவூரில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'சமூக இணக்கப்பாட்டையும் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது.
இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமல்ல, உலகில் பாரிய  அரசியல் மாற்றத்தை கொண்டுவருவதற்கு உதவியிருப்பது சிறந்த ஊடகப்பணி என்பதை மறுப்பதற்கில்லை.  இலங்கையின் தற்போதைய நல்லாட்சிக்கு வாக்காளர்களை ஒருசேர அணிதிரட்டியதும் ஊடகங்களின் பணியே.

கடந்த காலத்தில் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்த்ததால்,  விரும்பத்தகாத விடயங்கள் நடந்தேறின. கடந்தகால துன்பியல்கள் சில,  வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுவதால் மக்கள் மனங்களில் ஆறிப்போன புண்கள் மீண்டும் புதுக்காயங்களாக, ஆறாத வடுக்களாக்கப்படுகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X