2025 மே 19, திங்கட்கிழமை

மர்மப் பொருள் வெடித்து மாணவி பலி

George   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில்  கந்தளாய் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பன்சல் கொடல்ல கிராமத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வான் எல சிங்கள மகா வித்தியாலயத்தில் 8ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 13 வயதுடைய வீரசிங்க முதியன்சலாகே அபசரா தக்சிலா என்ற மாணவியே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

செவ்வாய்க்கிழமை(31) மாலை, பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்காக குடத்தை எடுத்து அதற்குள் இருந்த பொருளை வெளியேற்றி முயற்சித்த போது,  குடத்துக்குள் இருந்த பொருள் வெடித்துள்ளது.

இதனால் பலத்த காயங்களுக்குள்ளான மாணவி, உடனடியாக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்; மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை(01) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் தந்தை, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் என்றும் அவர் விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருபவர் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எலப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X