2025 மே 19, திங்கட்கிழமை

மாபெரும் எழுச்சி நிகழ்வு

Administrator   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா 

பெண்களின் உயர்வு சமூகத்தின் உயர்வு என்ற தலைப்பிலான மாபெரும் எழுச்சி நிகழ்வு வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரடியனாறில் அண்மையில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யும் சேவ்த சில்ரன் அமைப்பும் இணைந்து வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமை நிலையில் உள்ள,குடும்பத்திற்கு தலைமை தாங்கும் பெண்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றது. 

2013ஆம் ஆண்டு தொடக்கம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தினை பெருக்கிக்கொண்டவர்கள் அவர்களின் அனுபவத்தினை ஏனையவர்களுடன் பகிரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் பால் நிலை உத்தியோகத்தர் திருமதி கி.லாவண்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

நிகழ்வின் ஆரம்பத்தில் பெண்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து கரடியனாறு மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. 

இதன்போது மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யும் சேவ்த சில்ரன் அமைப்பும் இணைந்து வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமை நிலையில் உள்ள,குடும்பத்திற்கு தலைமை தாங்கும் பெண்களுக்கான திட்டங்களில் வெற்றியடைந்தவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். 

அத்துடன் ஏனையவர்களுக்கும் தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையும் இதன்போது பரிமாறிக்கொண்டனர்.  இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X