2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைதிகள் இளைப்பாற்று மண்டபம் திறப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் நலன் கருதி, சுமார் 100 பேர் பயன்படுத்தக் கூடியவகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கைதிகள் இளைப்பாற்று மண்டபம் புதன்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.

உலக செஞ்;சிலுவை சங்கத்தின் நிதி உதவியின் கீழ், 4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தை, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் திறந்துவைத்தார்.

மண்டபத்துக்கான நினைவுப் படிகத்தை சிறச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.வி.எச்.பிரியங்கர திறந்துவைத்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம், மட்டக்களப்பு சிறைச்சாலையின் நலன்புரி சங்கத் தலைவர் என்.வி.ரஞ்சன், பொருளாளர் வி.பிரதீபன், சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் ஏ.இஸ்கந்தராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

பின்பு ஆதிதிகள் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள குளியல் அறை மற்றும் களிவறைகளின் வசதிகளை இவர்கள் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X