2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பழுதடைந்த உணவு பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான மூவரையும்;; 18,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.என்.அப்துல்லாஹ் உத்தரவிட்டதுடன் எச்சரிக்கை செய்து விடுதலை செய்தார்.

மட்டக்களப்பு நகரில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று புதன்கிழமை (22) மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மேற்படி வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.

மனித பாவனைக்கு உதவாத குளிர்பானங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்த குற்றத்துக்காக இவர்கள்; கைதுசெய்யப்பட்டதுடன் மட்டக்களப்பு, நீதவான் நீதிமன்ற நீதவான் அப்துல்லாஹ்வின் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்செய்யப்பட்டபோது, தலா ரூபாய் 6000 ரூபாய் வீதம் 18,000 தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X