2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சகலரும் ஒத்துழைக்கவேண்டும்: இலங்கை ஆயர்கள் பேரவை கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 23 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி,  முன்வைக்கப்படவுள்ள அரசியலப்பின் 19ஆவது திருத்த சட்ட மூலத்துக்கு  அனைத்து இலங்கை மக்களும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தெரிவித்தார்.

கண்டி தேசிய குரு மடத்தில் கடந்த 3 தினங்களாக நடைபெற்ற ஆயர்கள் பேரவை மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி, சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்தான் தனிநபர் அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படுவதுடன் மக்களால் தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்.இதன்மூலம் அமைதி,  நிரந்தர சமாதானம், ஒப்புரவு, புரிந்துணர்வு, நல்லிணக்கம், எல்லாமக்களும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய சூழ்நிலை என்பன உருவாகும்.

எனவே, இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் கத்தோலிகக் மக்கள் அனைவரும் குறித்த பிரேனைக்கு முழுமையான ஆதரவை வழங்கவேண்டுமென ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஆயர் பொன்னையா ஜோசப் மேலும் தெரிவித்தார்.

தனிநபர் கைகளில் அதிகாரம் குவிந்து கிடந்தமையால்தான் கடந்த காலங்களில் முழு நாடும் பற்றி எரிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X