Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 05 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டம் தேசிய நெல் உற்பத்தியில் 04ஆவது இடத்தைக் கொண்டுள்ளபோதிலும் மாவட்டத்தில் இம்முறை 62,000 ஏக்கர் சிறுபோகச்செய்கை பண்ணப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சிவலிங்கம் தெரிவித்தார்.
வருடத்துக்கான உணவுத் தேவைகளுக்காக வருடாந்தம் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் ஜூன் மாதம் வரையான மூன்றரை மாத கால நெல் பயிர்ச்செய்கை செய்வதில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னின்று வருகின்றது.
சிறிய நீர்ப்பானக் குளங்களான கல்லடி வட்டை, தாந்தாமலை, நல்ல தண்ணி ஓடை ஆகிய குளங்களிலிருந்து மட்டும் சுமார் 10,000 ஏக்கருக்கு நீர் பாய்ச்சப்படுவதாக உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
தற்பொது நெல் வயல்களில் நீர் பாய்ச்சுதல், பசளையிடுதல், களை பிடுங்குதல் போன்ற வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அனுபவமிக்க விவசாயிடம் அறுவடை பற்றிக் கேட்டபோது, எந்தவித நோய்த்தாக்கமும் இல்லாத நிலையில் ஏக்கருக்கு 80 புசல் நெல் அறுவடையாகப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த வயல் வெளிக்கு பெரிய நீர்ப்பானக் குளங்களான நவகிரி, உன்னிச்சை, கட்டுமுறிவு மற்றும் வாகனேரிக் குளத்திலிருந்தும், நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களான புழுக்குணாவை, கிரிமிச்சை ஓடை, மியான் கல்ல மற்றும் மதுரங்குளத்திலிருந்தும் நீர் பாய்ச்சப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
45 minute ago
50 minute ago