Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 06 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இந்தப் பிராந்தியத்தை ஆளக்கூடிய வகையில் சிறார்களை எதிர்காலத் தலைவர்களாக மாற்றுவதில் பல்வேறு இடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் சுமார் 18 இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் வள நிலையத் திறப்பு விழா, மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'சிறார்களுக்கான பிள்ளைப்பராய முன்னேற்றங்களில் வறுமை பெரிய சவாலாக உள்ளது. வறுமையை போக்குவதற்காக சில தாய்மார்கள், தங்களது பி;ள்ளைகளை விட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்ல நேரிடுகின்றது. இதனால், இங்கு பிள்ளைகளின் பராமரிப்பும் கண்காணிப்பும் சீர்கெட்டுப் போவதுடன், சிறார்களின் இளம் பராரயக் கல்வியும் பாழாகின்ற துரதிருஷ்டமும் ஏற்படுகின்றது.
கைவிடப்படும் சிறுவர்களை பாதுகாத்து பராமரிக்கின்ற விடயங்களில் பல சமூக சவால்களை நாம் எதிர்கொள்கின்றோம். இத்தகைய பிரச்சினைகளுக்கு ஓரளவாவது தீர்வு காணும் முகமாக பிளான் ஸ்ரீலங்கா நிறுவனம் சிறுவர் வள நிலையங்களை அமைக்க உதவியுள்ளது. அத்துடன், சிறுவர் நலத் திட்டங்களிலும் அந்த நிறுவனம் அக்கறையுடன் செயற்படுகின்றது.
எந்தவொரு நிலைமையிலும் பெற்றோரும் பராமரிப்பாளர்களும் இளம் பராயப் பிள்ளைகளின் கல்வியையும் சுகாதாரத்தையும் அவர்களின் ஓய்வுநேர அம்சங்களையும் மறுக்கமுடியாது. அதனை முடிந்தளவு வழங்குவது எமது பொறுப்பாகும்' என்றார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் பிரசன்ன போயகொட, கிழக்குக்கான மாவட்ட முகாமையாளர் டேவிட் சதானந்தம், சிறுவர் திட்ட இணைப்பாளர் வன்னி ரமா, சிறுவர் பாதுகாப்பு வெளிக்கள அலுவலர் ஜே.எஸ். ரெட்ணேஸ்வரி உள்ளிட்டோரும் அதிகாரிகளும் பிரதேசப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
30 minute ago
35 minute ago