2025 மே 17, சனிக்கிழமை

அலுவலக அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட மாநாடு

Gavitha   / 2015 மே 07 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை (09) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தபால் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில், கிழக்கு மாகாண அஞ்சல் மா அதிபதி, அக்கரைப்பற்று, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நான்கு அஞ்சல் அத்தியட்சகர் பிரிவிலுமுள்ள அஞ்சல் அத்தியட்சகர்;கள், அஞ்சல் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலுள்ள அஞ்சல், உப அஞ்சல் அலுவலகங்கள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சிணைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான கலந்துரையாடல் நடைபெருவது இதுவே முதற் தடவையாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .