2025 மே 17, சனிக்கிழமை

காணிப் பிரச்சினையை ஆராய விசேட குழு நியமிப்பு

Kogilavani   / 2015 மே 08 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர் எல்லை நகர் காணிப் பிரச்சிணையை ஆராய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை(7) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எல்லை நகர் காணிப்பிரச்சினை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது இந்தக் காணிப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்தக் குழு எதிர்வரும் 17, 18ஆம் திகதிகளில் கூடி இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஏ.நாசர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .