2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடைபெற்றுக்கொண்டிருந்த கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டதாக கூறி, செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர், கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதாதாவள நிலையமும் செங்கலடி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த மூன்று தினங்களாக கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கண்காட்சியை நடாத்திவருகின்றது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டதாகவும் இதன்போது சிங்கள மாணவர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மீண்டும் சிங்களத்தில் தேசிய கீதம் ஒலிபரப்பட்ட நிலையில் திடிரென சிங்கள மாணவர்கள் சிலர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு சென்ற ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .