2025 மே 17, சனிக்கிழமை

தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள் நாளை

Princiya Dixci   / 2015 மே 22 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தேசிய இளைஞர் தினம், நாளை சனிக்கிழமை (23) கொண்டாடப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

இதன் பிரதான நிகழ்வு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மஹரகமயிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்றாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 50 இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சில இளைஞர், யுவதிகளின் திறமைகளைப் பாராட்டி விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .