2025 மே 17, சனிக்கிழமை

துஷ்பிரயோகங்களை தடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும்

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

 புங்குடுதீவு வித்யா என தொடர்கதையாகியுள்ள துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த, ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் மருதமுனை மகளிர் நிலையம் தெரிவித்துள்ளது.
 
புங்குடுதீவு வித்தியாவின் படுகொலை தொடர்பில் அவ்அமைப்பு இன்று சனிக்கிழமை (23) விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாவது.
 
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015.05.13ஆம் திகதி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒவ்வொரு இரக்கமுள்ள நெஞ்சையும் உருக வைத்தது.
 
பெற்றோர் தனது பிள்ளைகள் இந்த சமூகத்தில் பேரும் புகழுடனும் வாழ வேண்டும் என பல கனவுக் கோட்டைகளைக் கட்டி, வறுமையை தன் வயிற்றில் கட்டிக் கொண்டு பிள்ளைகளை கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துகின்றனர். ஆனால், அது பிள்ளைகளுக்கு சில சமயங்களில் எமனாகவும் குடும்பத்திற்கு துயரமாகவும் அமைகின்றது. 

இலங்கையில் பல்வேறு இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்கதையாக உள்ளன.                                              
 
இவ்வாறு பெண்களக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு மாத்திரம் நின்றுவிடக் கூடாது. அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டணை நாட்டின் எதிர்கால வரலாற்றில் இப்படியொரு சம்பவம் நடப்பதற்கு முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும்.

எதிர்காலத்தில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்விடயங்களில் அரசு தன் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். குற்றவாளிகள் இலகுவாகத் தப்பிக்கொள்ளும் வகையில் எமது நாட்டுச் சட்டங்கள் இறுக்கமற்றத் தன்மையைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.

குற்றங்களுக்கேற்ற வகையில் தண்டனைகளும் கடினப்படுத்தப்பட வேண்டும். சட்டங்களும் கொள்கைகளும் ஒரு நாட்டினதும் அம்மக்களினதும் நலனைக் கொண்டதாகவே அமைகின்றது. அப்படியாயின் குற்றவாளிகளின் தண்டணைக்கான சட்டங்களும் திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது அரசின் கடமையாகும்.
 
இவ்வாறான குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராக்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது என எண்ணுகின்றோம்;. எமது நாட்டில் எமது பிள்ளைகளை பெற்றோர்களாகிய நாம் மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்;. இல்லையேல் இன்னும் பல வித்தியாக்களை எதிர்காலத்தில் காண நேரிடும்.
 
எமது நாடு சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தும் நாடாகும். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்நிலையில் பொது மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்து அதனை அவமதிப்பதோ, பொது இடங்களில், நீதி வழங்கும் நிறுவனங்களுக்கு அவ கீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதோ அநாகரீகமான செயலாகும்.

இவ்விடயத்தை பொது மக்கள் கவனத்தில் கொண்டு மேலும் பிரச்சினைகளை உருவாக்காது சட்டத்தை மதித்து பொறுமையுடன் செயற்படுவது மறைந்து போன எமது சகோதரிக்குக் கொடுக்கும் மரியாதையாகும்.
 
தொடரும் இத்தகைய ஈனத்தனமான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கு பாலியல் வன்முறைகள், கற்பழிப்புக்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பவற்றை துரிதமாக விசாரித்து விரைவாக நீதி வழங்கப்படுவதற்கு தனியான நீதிமன்றங்கள் அமைப்பது காலத்தின் தேவையாகவுமுள்ளது. அத்தோடு தற்போது இலங்கை தண்டணைச்சட்டக்கோவையில் இது தொடர்பில் இருக்கின்ற சட்டப்பிரிவுகளைத் திருத்தி இப்படியான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதும் அரசின் கடமையாகிறது. 

மாண்புமிகு ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கும் சட்டச் சீர்திருத்தங்களை செய்வதற்கும் ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் சார்பிலும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சமூக நிறுவனங்கள் சார்பிலும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .