Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 23 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்க தனியான நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் வெள்ளிக்கிழமை (22) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டவிழ்த்து விடப்பட்டு கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறை தொடங்கி அலுவலகங்கள,; பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் என நீண்டு கொண்டே செல்கின்றது.
திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்துக் கோருவதும் என நாளாந்தம் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கோரும் பெண்களின் வழக்குகளும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கெல்லாம் காரணம் சட்டங்கள் கடுமையாக்கப்படாமையும் உரிய காலத்தில் தீர்ப்பு வழங்கப்படாமையுமே ஆகும்.
ஒரு பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் செல்வாரானால் விசாரணை என்று வருடக்கணக்கில் பொலிஸுக்கும் நீதிமன்றத்திற்க்குமாக குறித்த பெண் அலைந்து அலைந்து அலுப்படைந்த விடுகின்றனர்.
பணம் படைத்தவர்கள் பிரபல்யமான வழக்கறிஞர்களை வைத்து தனது சாதுரியத்தால் தீர்ப்பில் இருந்து தப்பித்து கொள்வதும், மேலதிகமாக மேல் நீதிமன்றங்களுக்கு விண்ணப்பித்து மீண்டும் பல வருடங்களையும் பணத்தினையும் வீண் விரயம் செய்து உடலால் பாதிக்கப்பட்ட பெண்ணை மனதாலும் பாதிப்படைய செய்கின்றனர்.
அத்தோடு தீர்ப்புக்களும் மிக விரைவாக 3 தொடக்கம் 6 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும். யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் மீதான கூட்டு துஷ்பிரயோகம் மற்றும் கொலையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கில் அதிகரித்து வரும் மாணவிகளுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்க அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு அதி உச்சமான தண்டனை வழங்கப்படுவதுடன், தொடர்ந்தும் குற்றச் செயல்கள் நடைபெறாவண்ணம் விழிப்பூட்டல் நடவடிக்கைகளை சமுகம் சார்ந்த அமைப்புக்களும் மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புக்களும் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று ஒரு வித்தியாவுக்கோ ஒரு கிருஷாந்திக்கோ மாத்திரம் இவ்வாறான வன்முறைகள் நடைபெறவில்லை. ஒவ்வொரு நாளும் இலங்கையில் வித்தியா போன்ற எத்தனையோ வித்தியாக்கள் உடலாலும், மனதாலும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.
அவற்றை தடுக்க அரசு முன்வரவேண்டும். தேர்தலுக்கும் ஆட்சி மாற்றங்களுக்கும் கொள்கை வகுத்து நிறைவேற்றும் நாடாளுமன்றம், உலகின் அடிக்கட்டுமானமாக உள்ள சிறுவர்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும்.
ஏனைய அரபு நாடுகளைப்போல் உடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என மக்கள் கொதித்துப் போயுள்ளார்கள் என்றால் மக்களின் மனதில் மாணவி வித்தியாவின் கொலை எவ்வளவு வன்மத்தினையும் பாதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது என்பதனை அரசு புரிந்துக் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் குற்றச் செயல்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். தீர்ப்புக்களும்
துரிதப்படுத்தப்படவேண்டும.; சட்டத்தின் மீது மக்களுக்கு பூரண நம்பிக்கை ஏற்பட வேண்டும். தீர்ப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாவிடத்து மக்களினால் அகிம்ஷை போராட்ட சூழல்கள் உக்கிரம் அடைந்து, மேலும் மக்கள் சட்டத்தினை கையில் எடுக்கும் நிலை உருவாகும்.
அதனை ஈடுகொடுக்கும் நிலை மீண்டும் யுத்த நிலையாக மாறிவிடும். இதனைத் தடுத்து வித்தியாவின் மரணத்திற்கு உரிய கடுமையான தீர்ப்பு வழங்கப்படுவதுடன் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தும் ஏற்படாமல் தடுக்க புதிய கடுமையான சட்டங்களும் தனியாக நீதிமன்றங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக பெண்கள் சார்ந்த அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் குரல் கொடுக்க வேண்டும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago