2025 மே 16, வெள்ளிக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 15 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வயல் நிலத்தை  பண்படுத்திக்கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மண்வெட்டியில் தட்டுப்பட்ட நிலையில்  கைக்குண்டொன்று நேற்று  புதன்கிழமை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்தபோது, மண்வெட்டியில் தட்டுப்பட்டு கணீர் என்று ஒலி எழும்பியது. பின்னர், மண்ணை நன்றாக  தோண்டிப் பார்த்தபோது கைக்குண்டொன் இருந்துள்ளது.

இது பற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவுடன் பொலிஸாரும் குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவ நிபுணர்களும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குறித்த இடத்துக்குச் சென்று கைக்குண்டை  மீட்டுள்ளனர்.

இது பழைய கைக்குண்டென்று பொலிஸார்  தெரிவித்தனர்.  

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .