Thipaan / 2015 ஜூலை 17 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி,யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்கான காணி நடமாடும் சேவை, நேற்று வியாழக்கிழமை(16) காலை முதல் மாலை வரை சித்தாண்டி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்த காணி நடமாடும் சேவையில் காணிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான மீளாய்வுகள், விசாரணைகள் நடைபெற்றன.
மாகாண காணி ஆணையாளரது 2008-4 சுற்று நிருபத்துக்கமைவாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 2,772 பேருக்கான காணி நடமாடும் சேவையாக இது அமைந்திருந்தது,
இந்த நடமாடும் சேவையில் காணிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கான இரண்டாம் கட்ட விசாரணையாகவும் இது அமைந்திருந்தது.
இந்த விசாரணையினை அடுத்து விவரங்கள் காணி ஆணையாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்.
சேவையில் ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பெரியவெட்டுவான், நவுண்டல்யமடு, குளுவினமடு, விற்பனமடு, வெள்ளையன்ட சேனை, யாவானை, ஈரளக்குளம் அலியா ஓடை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நடமாடும் சேவையில் பங்கு கொண்டனர்.


53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago