2025 மே 15, வியாழக்கிழமை

பஸ்ஸில் பயணித்தவர் மரணம்

Thipaan   / 2015 ஜூலை 18 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொழும்பிலிருந்து கல்முனையை நோக்கிச் சென்ற  பஸ்ஸில் பயணித்த பிரயாணியொருவர் சனிக்கிழமை அதிகாலை ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறே மரணமடைந்துள்ளார் என மட்டக்களப்;பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – நாவற்குடா கண்ணப்பர் வீதியைச் சேர்ந்த சபரி செபமாலை (வயது 69) எனும் பயணியே பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறு மரணமடைந்துள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வெள்ளிக்கிழமை இரவு கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் இந்தப் பயணி ஏறியுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் பஸ் மட்டக்களப்பை நெருங்கும்போது இவர் ஆசனத்தில் அமர்ந்தவாறு இறந்து காணப்பட்டுள்ளார்.

உடனடியாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸைக் கொண்டு சென்று சம்பவத்தை அறிவித்து சடலத்தைக் காண்பித்த பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .