Princiya Dixci / 2015 ஜூலை 19 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஒரு சமூகம், கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சியடையும் போதே அந்த சமூகம் முன்னேற்றமடையும் என கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிவம் பாக்கியநாதன், இன்று ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்க மாணவர் சமூகத்தை கல்வியில் முன்னேற்ற வேண்டும். அந்த வகையில் நாட்டுக்கு ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்க மாணவர் சமூகத்தை கல்வியில் முன்னேற்றுவதற்காக எமது சம்மேளனம் மாணவர்களின் கல்விக்குதவுவதுடன் அவர்களை பாராட்டுவதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது.
மேலும், பொற்றொழிலாளார்களையும் கௌரவிப்பதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago