Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-.எஸ்.சபேசன், ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கபிலநிறத்தத்தியின் (அறக்கொட்டி) தாக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் நெல்வயல்களும் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 250 ஏக்கர் நெல்வயல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூர் மற்றும் வெல்லாவெளி கமநலசேவைப் பிரிவுகளில் இத்தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. நவகிரி மற்றும் சேனநாயக்க சமுத்திரங்களின் மூலம் நீர் பாய்ச்சப்படும் வயல்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடுமையான வெய்யில் மற்றும் பனி இதற்கு காரணமாக இருக்கலாமென்று சந்தேகிப்பதாக மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் தெரிவித்தார்.
இந்த கபிலநிறத்தத்தியின் தாக்கம் தொடர்பில் பேராதனையிலுள்ள தலைமை விவசாயத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கடந்த சனிக்கிழமை (18) வந்த பூச்சியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வுக்காக மாதிரிகளை எடுத்துச்சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் சவளக்கடை கமநலசேவை கேந்திர நிலையத்தின் கீழ் செய்கை மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைகளிலேயே கபிலநிறத்தத்தியின் தாக்கம் காணப்படுவதாக சவளக்கடை பிராந்திய விவசாயப் போதனாசிரியர் எஸ்.சசிதரன் தெரிவித்தார்.
கபிலநிறத்தத்தியின் தாக்கத்தை இல்லாமல் செய்வதற்கு கிருமிநாசினிகள் விசிறப்பட்டபோதிலும், அவற்றுக்கு இயைபாக்கம் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

48 minute ago
56 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
56 minute ago
1 hours ago
6 hours ago