Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர் செல்லத்துரை அரசரட்ணத்தின் வீட்டின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் திங்கட்கிழமை இரவு 11.40 மணிக்கு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒருவர் வளவினுல் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்தபோது குறித்த நபர் வேட்பாளரினால் பிடிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் பிரசுரங்களை ஒட்டிக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குறித்த வேட்பாளரது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago