2025 மே 14, புதன்கிழமை

'இன ஒற்றுமைக்கான செயற்றிட்டங்களில் கவனம் செலுத்தவுள்ளேன்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

.ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன ஒற்றுமைக்கான செயற்றிட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தனித்துப் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுக்கும் வண்ணம் எங்களின் எதிர்கால செயற்றிட்டங்கள் அமையும். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்னமும் பழைய நிலைமைக்கு திரும்பாது பின்னடைந்துள்ள பொருளாதார வாழ்வாதார அபிவிருத்திகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகளிலும்; கவனம் செலுத்தவுள்ளேன்' என்றார்.

'இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய அத்தனை அம்சங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

'தமிழ் மக்கள் ஏகோபித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். அதேபோன்று  முஸ்லிம்கள் மு.கா.வை ஆதரித்துள்ளனர். எனவே, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் இதயசுத்தியுடன் ஒன்றிணைந்து, அமையவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் நல்லிணக்க அரசில் இனப் பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவருவதற்கு பாடுபடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நல்ல அனுபவஸ்தர்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை எடுக்கவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மட்டக்களப்பிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.

தீர்க்கப்படாத பல பிரச்சினைகள், காணிப்; பிரச்சினை, முழுமையான மீள்குடியேற்றம், உள்ளூராட்சி சபைகளுக்குள்ள எல்லைப் பிரச்சினை இவை எல்லாவற்றையும் தமிழர் தரப்புடன் இணைந்து புரிந்துணர்வுடன் தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .