2026 மே 04, திங்கட்கிழமை

35 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகளை கைப்பற்றியுள்ளதாக அந்த மாவட்ட  கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்,  பொலிஸ் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட இந்த வலைகளை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிள்ளையாரடி, பாலமீன்மடு, புன்னைக்குடா, வாகரை, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, ஊறணி, வலையிறவு உட்பட பல இடங்களில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

இந்த நடவடிக்கையால் மட்டக்களப்பு வாவியில் உள்ள பல வகையான மீன் இனங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .