2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஏலக்காயில் இவ்வளவு குணநலன்களா?

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏலக்காய் உணவில் பிரதான இடத்தை வகிப்பதோடு, உணவிற்கு நல்ல சுவையையும், நறுமணத்தையும் தரவல்லது. ஏலக்காயில் விட்டமின்கள் ஏ, பி, சி ஆகியன உள்ளடங்கியிருப்பதால், உடலின் ஆரோக்கியத்தை பேணுதில் பங்களிப்பு செய்கின்றது.

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் தேநீர்' குடிப்பதால், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புக்களை வழங்கும். தேயிலை குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து தேநீர் தயாரிக்கும்போது, வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த தேநீரைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

ஏலக்காயில் “பாலிஃபீனால்” என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. ஆகையால் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.  இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் தேநீரை குடிப்பதன்மூலம் நுரையீரலில், இரத்த ஒட்டம் அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம் குறையும்.  செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் சமிப்பாட்டு கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.

ஏலக்காய் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், இதய நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அதனுடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி  வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .