Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும்.
குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவினால் இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.
கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.
புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. கர்ப்பப்பைக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது.
குங்குமப் பூ வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்தும் வகையில் அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்பே குங்குமப்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது. வயது முதிர்ச்சியால் வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதமாகும். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தை குறைத்து இரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.
மூட்டு வலி உடையோருக்கு குங்குமப் பூவை எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்குகின்றது. அத்தோடு குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. ஆனால் அதனை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், பசியின்மை போன்றவை ஏற்படும்.
நல்ல குங்குமப் பூவை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலியானது. 10 அல்லது 15 நிமிடங்களில் கழித்து நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப் பூ என்பதை கண்டறியலாம்.
13 minute ago
13 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
21 minute ago
1 hours ago