Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைத் தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் அத்துடன் மலச்சிக்கலை போக்குவதோடு நரம்புச் சோர்வையும் நீக்கும்.
வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வரட்டு இருமல் கூட நீங்கிவிடும்.
வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நாரை நீக்கி சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கி, உடல் சூடு தணியும். சீதபேதி மற்றும் தாகம் ஆகியனவும் தணியும்.
வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், இரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.
வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை தேள், பூரான் ஆகியன கடித்த இடத்தில் தடவி வந்தால், கடியினால் ஏற்படும் வலி குறையும். கோழைக் கட்டு ஆகியவை இளகும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.
வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்தி வந்தால் மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025