Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதுடன் பயன்படுத்த எளிதானதும் மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதாகும் ஆகையால், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுபோன்ற போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளமாகும்.
சமீப காலமாக க்ரீன் டீ அருந்துவது ஃபேஷனாக இருந்து வருகின்றது. க்ரீன் டீயில் இருக்கும் பாலிபினால்ஸ்கள் வாழை இலையில் அதிக அளவில் உள்ளன. இது பல நோய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இன்று அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது. இன்று பலரின் பயமாக இருக்கும் நோய்க்கு அன்றே தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். இந்த இலையை நேரடியாக உண்பது நம் ஜீரண சக்திக்கு அப்பாற்ப்பட்டது என்பதால், இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இதிலுள்ள நன்மைகள் என்று நோக்கும் பொழுது, பெரும்பாலும் ஆண்களுக்கு வரும் புரோசுட்டேட் புற்றுநோய் எனப்படும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயைத் தடுக்கும் பாலிபினால்ஸ், வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அபரிவிதமான ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் பல தீவிர நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப் பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது. இதிலிருக்கும் ரூட்டின் குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இரத்த உறைவு மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வாழை இலை ஒரு இயற்கை கிருமி நாசினி. இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சு தன்மையை போக்குவதுடன் நம் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
நாம் நாகரீகம் என்ற பெயரில் நம் பழைமையின் அரிய நன்மைகளை மறந்து, இயற்கையை பாழ்படுத்தாமல், மூடநம்பிக்கையை அகற்றி அதில் பொதிந்திருக்கும் இரகசியங்களைக் கண்டு கடைப்பிடிக்கலாம். இயற்கையான முறையில் வளர்ந்த வாழை இலைக்குதான் இத்தனை மகிமையும் உள்ளது.
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025