Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 04 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும்.
உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசாக உட்கார வேண்டாம். செங்குத்தாக முதுகை நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்து, செங்குத்தாக உட்காருவதும் கூடாது.
தற்காலத்தில் செய்யப்படும் நாற்காலிகள் செங்குத்தாக இருப்பதில்லை. முதுகுப் புறமும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள். இருக்கையின் உயரமும் முக்கியமானது. உட்கார்ந்திருக்கும்போது, உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியானதும், முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கவும் கூடிய உயரம் உள்ள நாற்காலிகளாக தேர்ந்தெடுத்து உட்காருங்கள்.
உட்காரும்போது மட்டுமின்றி ஏனைய நேரங்களிலும் உங்கள் முதுகு, கழுத்து மற்றும் இடுப்பு போன்ற இடங்களிலுள்ள, இயற்கையான உடல் வளைவுகளைச் சரியான முறையில் பேணுவது அவசியம். நிற்கும் போதும் இது முக்கியமானதாகும். உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்க வேண்டாம். அவ்வாறு நிற்க நேர்ந்தால் அடிக்கடி உடலின் நிலையை மாற்றி நிற்பது அவசியம்.
தச்சு வேலை, அச்சக வேலை, ஆடைகளை அயன் பண்ணுவது மற்றும் சமையல் செய்வது போன்ற நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் பாதகத்தை ஏற்படுத்தும். ஆகையால் அவ்வப்போது நிலைகளை மாற்றி கொள்வது அவசியம்.
பயிற்சிகள்:
எமது உடலுக்கு பயிற்சிகள் கொடுப்பது அவசியம். தினமும் ஏதாவது பயிற்சி செய்வது கட்டாயமாகும். நீந்துவது, நடப்பது, ஓடுவது போன்ற எதுவும் உதவும். இடுப்பு வலி ஏற்படாது தடுப்பதற்கு வயிற்று தசைகளையும், முதுகுப் புறத் தசைகளையும் வலுவாக வைத்திருக்க வேண்டும். தசைகளை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவையும் ஆகும்.
படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும். இவற்றை தவிர உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவது அவசியம். இவற்றை தினசரி செய்து வர, முதுகுவலி சரியாவதுடன் தொடர்ந்தும் ஏற்படாது பாதுகாத்துகொள்ளலாம்.
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Oct 2025
18 Oct 2025