2021 ஜூலை 31, சனிக்கிழமை

எமது வீட்டு வைத்தியர் இஞ்சி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. அந்தவகையில்,

இஞ்சிசாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும். இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி குணமாகும். சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட்டால் பித்த, கப நோய்கள் ஏற்படாது. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறுகள் நீங்கும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய்நாற்றம குறைவதோடு, துவையலாக்கி சாப்பிட வயிற்று இரைச்சல் குணமாகும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் குணமாகும்;.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகோப்பை வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி குணமாகும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர நோய் தடுப்பு திறன் அதிகரிப்பதோடு, தொந்திகுறைவடையும், நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறைவடையும்.


இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் இது  குடலில் சேரும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. மேலும் இது  கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
 
இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை எமது விட்டு வைத்தியர் எனவும் கூறலாம். இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடல் உபாதைகளும் வராது, ஆரோக்கியமாகவும் வாழலாம்.


  Comments - 0

 • Ramakrishnan Monday, 15 June 2015 04:24 AM

  இஞ்சி பற்றிய தகவல்கள் அ​னைத்தும் பயனுள்ள​வை. நன்றி, ​மேலும் தகவல்கள் எ​திர்பார்க்கி​றேன்

  Reply : 0       0

  ganesh Wednesday, 23 November 2016 04:59 PM

  inji sapidal marunde vendam doctor of inji

  Reply : 0       0

  shaheedjp Friday, 26 December 2014 03:20 AM

  rompa nantry.mealum entrum thodarattum.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .