2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

அரச வைத்திய அதிகாரிகளின் போராட்டம் ஆரம்பமானது

Kogilavani   / 2017 மே 22 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நுவரெலியா மாவட்ட அரச வைத்தியர்கள், இன்றுக் காலை 8 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துலை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளிலேயே, பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றன.

மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிறுவனமாகிய சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைகழகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், மேற்படி வைத்தியசாலைகளில் அவரச சிகிச்சை பிரிவு வழமைபோல இயங்கி  வருவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .