2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சீரற்ற காலநிலையால் மலையகத்தின் இயல்புநிலை பாதிப்பு

Kogilavani   / 2017 மே 30 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், கு.புஸ்பராஜா, ஆர்.ரமேஸ்

மலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் கடுங்காற்றுடன் கூடிய மழையினால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவும் ஏற்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 9.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஹம்பகமுவ, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

மழை காரணமாக பிரதான வீதிகள் வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நானுஓயா-ரதெல்ல குறுக்கு வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்படுவதால், நுவரெலியா நானுஒயாவிலிருந்து தலவாக்கலை, ஹட்டனுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம்

இதேவேளை, ஆக்ரனஒயா பெருக்கெடுத்துள்ளதால் டில்லுகுற்றி மற்றும் இராணிவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மின்சார தடை

காற்றுடன் கூடிய மழை காரணமாக பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் இதனால் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. பல தோட்டங்களில் திங்கட்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரைநேர வேளை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் கடுங்காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, பல தோட்ட நிர்வாகங்களுக்கு, தொழிலாளர்களுக்கு அரைநேர வீடுமுறை வழங்கியுள்ளன.

மாணவரின் வருகை குறைவு

தொடர் மழை காரணமாக, நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட் பாடசாலைகளில் நேற்றைய தினம் மாணவரின் வருகை குறைவாகவே இருந்ததாக பாடசாலையின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

சிறு வியாபாரிகள் பாதிப்பு

மழை காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபட்டுவரும் சிறுவியாபாரிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .