2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பிரேதத்தை படம் எடுத்த திடீர் மரண விசாரணை அதிகாரி கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம்.மும்தாஜ்)

இறந்த மாணவி ஒருவரின் பிரேத பரிசோதனையின்போது  வைத்தியரின் எதிர்ப்பையும் மீறி பிரேதத்தை கையடக்கத் தொலைபேசி மூலமாக படம் எடுத்ததாகச் சொல்லப்படும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இருபத்தி ஐயாயிரம் ரூபாய் ரொக்க மற்றும் ஒரு இலட்சத்து இருபதைந்தாயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல நிகவெரட்டிய நீதவான் திருமதி கே. கே. லியனகே உத்தரவிட்டுள்ளார்.

19 வயதான மாணவி ஒருவரின் பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருக்கையிலேயே  இறந்த மாணவியின் பிரேதத்தை படம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. நிகவெரட்டி பெலதொர வடக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியான டபிள்யூ.எம்.ரஞ்ஜித் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபர், வைத்தியசாலை சவச்சாலையில் இடம்பெற்ற மாணவியின் பிரேத பரிசோதனையின் போது  கையடக்கத் தொலைபேசியினூடாக மாணவியின் உடலை படம் பிடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொபேஹேன பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .