2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தேயிலைச் செடிகளுக்கிடையில் சடலம் மீட்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt( எஸ்.சுவர்ணஸ்ரீ )

மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றின் தேயிலைச் செடிகளுக்கிடையில் இருந்து ஆணொருவரின் சடலத்தை மஸ்கெலியா பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ளனர்.

நோட்டன் - மஸ்கெலியா பிரதான பாதையில் ஹபுகஸ்தென்ன தெபர்ட்டன் தோட்டத்துக்கு அருகில், பிரதான பாதையிலிருந்து 5 மீற்றர் தூரமுள்ள தேயிலைச் செடிகளுக்கிடையில் இருந்தே, பொலிஸார் இச்சடலத்தினை  மீட்டுள்ளனர்.

இன்று காலை இந்த இடத்திற்கு விறகு சேகரிப்பதற்குச் சென்ற பிரதேச மக்கள் இச்சடலத்தினை கண்ணுற்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸாருக்கு உடனடியாக அவர்கள் அறிவித்ததனர்.

பலியானவர் திவுலபிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுமார் 48 வயது மதிக்கப்பட்டவர் என்றும் இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .