Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
முஸ்லிம் மக்கள் ரமழான் மாதத்தில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பிறமதத்தவர்களுடன் இணைந்து செயற்படுவதை காணமுடிகிறது என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கண்டி மீராமக்காம் பள்ளியில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கவின் ஏற்பாட்டில் நான்காவது வருடமாகவும் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட நோன்பு திறக்கும் இப்தார் வைபவத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தமிழில் உரையாற்றிய அவர்,
"நோன்புக் காலங்களில் முஸ்லிம் மக்களிடையே சகோதர உணர்வு மேலோங்கி நிற்பதைக் காண்கிறேன். இதன் காரணமகவே முஸ்லிம்களுடன் இணைந்து வருடா வருடம் இப்படியான வைபவங்களை ஒழுங்கு செய்து வருகிறேன். சாந்தி சமாதானம் இவற்றிற்கு இம்மாதத்தில் முதலிடம் அளிக்கப்படுகிறது. இதனை நான் பெரிதும் விரும்புவதுடன் பாராட்டுகிறேன்" என்றார்.
கண்டி மாவட்டத்திலுள்ள இன மத பேதங்களின்றி இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .