2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

லிந்துலையில் மரக்கன்று நடும் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அ.கனகசுந்தரம்)

ஜனாதிபதியின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் நாடளாவிய ரீதியில் 11 இலட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் ஒரு கட்டமாக லிந்துலை, மெராயாவில் காணப்படும் குளத்தைச் சுற்றி ஆயிரம் மூங்கில் கன்றுகளை நடும் நிகழ்வு நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 10.07 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் ஏ.சுதாகரன், பிரதித் தலைவர் ஏ.பி.சக்திவேல், நுவரெலியா  மாவட்ட பிரதி அரசாங்க அதிபர், நுவரெலியா மாவட்ட உதவி ஆணையாளர், மாவட்ட மேலதிக உதவிச் செயலாளர், மத்திய சுற்றாடல் சபையின் உயரதிகாரிகள், வோல்ட்றீட் தோட்ட முகாமையாளர், மெராயா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .