2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வாகன விபத்தில் இரண்டரை வயது குழந்தை பலி

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

பசறை நகரில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 ½  வயது ஆண் குழந்தை பரிதபாகரமாக உயிரிழந்துள்ளது.

தந்தையுடன் முச்சக்கர வாகனமொன்றில் ஒன்றில் பசறை நகருக்கு சென்ற குழந்தையை தந்தை வாகனத்தில் வைத்துவிட்டு வெளியேறி செல்ல குழந்தையும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளது.  இதன்போது வேகமாக வந்த வான் ஒன்று குழந்தையை மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வான்,  மற்றும் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்பு சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .