2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

நோர்வூட் நகரப்பகுதியில் வெள்ளப்பெருக்கு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நோர்வூட் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் வேளையில் பெய்த அடை மழையினால் நோர்வூட் நகரப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் நகரின் வடிகால் கட்டமைப்பு உரிய வகையில் பராமரிக்கப்படாததால் வெள்ள நீர் நோர்வூட் நகரின் பிரதான வீதியில் நிரம்பியது.

இதனால் வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததில் குடியிருப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இந்தத்திடீர் வெள்ளப்பெருக்குக் குறித்து நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் கினிகத்தேனை பிரதேச செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நோர்வூட் நகரிலுள்ள பொது மைதானத்தின் புனரமைப்புப்பணிகள் உரிய காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் வடிகான்கள் பல அடைப்புக்குள் உள்ளாகியுள்ளதாக பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .