2021 ஜூன் 16, புதன்கிழமை

போதைப்பொருள் விற்பனை செய்பவரை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ


ஹட்டன், கொட்டகலை வூட்டன் தோட்டப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒருவரை, கைதுசெய்யுமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகளும் இன்று திங்கட்கிழமை (02) காலை 09 மணியளவில்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


குறித்த நபர், பொலிஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் பல வருட காலமாக போதைபொருள் விற்பனை செய்து வருவதாகவும் இதனால்; தமது பிள்ளைகள் உட்பட சமூகமும் சீரழிந்து செல்வதாகவும் மேலும், தோட்ட அதிகாரியின் அனுமதி இல்லாமல் குறித்த நபர் தன்னுடைய வீட்டை அபிவிருத்தி செய்து வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த திம்புள்ள,பத்தனை பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது.


பல தடவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும் குறித்த நபரை கைதுசெய்யாது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் வருகை தந்துள்ளனர் என கோரியே ஆர்ப்பாட்டக்கார்கள் பொலிஸாக்கு எதிராக கோஷமெழுப்பினர்.


ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கமைவாக சந்தேகநபரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய திம்புள்ள பத்தனை பொலிஸார், கஞ்சா பக்கற்றுகளை கைப்பற்றியதாக தெரிவித்தனர்.


இதனையடுத்து, குறித்த நபரையும் மற்றொருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததாகவும் அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் வினவியபோது,


கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பல காலங்களாக போதைப்பொருள் விற்பனைசெய்து வந்தவரொனவும்  அக்குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .