Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
கண்டி நகரில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுருத்த பண்டாரநாயக்காவின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையானது நேற்று மாலை முதல் இரவு வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கண்டி நகர வீதிகளுடாகச் செல்லும் வாகனங்கள், பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பொது இடங்கள் போன்றன பொலிஸாரினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலி, மது பொதையில் வாகனம் செலுத்திய இரு சாரதிகள், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகவிருந்த 3 சந்தேகநபர்கள், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் என 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த கண்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025