Editorial / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதினைந்து பேரை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக ஜீப் ஒன்று பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த போது கம்பளை நெட்டாபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடிக்கு கீழே கவிழ்ந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இரவு வந்த இந்தக் குழுவினர் திங்கட்கிழமை (01) அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
மூன்று நாட்களாக இறுதி ஊர்வலத்தில் இருந்த இந்தக் குழுவினர், வேலைக்குச் செல்லும் நோக்கில் கிராமங்களுக்குச் திரும்பியுள்ளனர். டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய குழந்தைகள் உட்பட ஆறு பெண்களும் ஒன்பது ஆண்களும் இதில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
48 minute ago
3 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
16 May 2026
16 May 2026