2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலையில் 3ஆவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, அக்குறணை  அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கடமையாற்றிய பதில் அதிபர் எம்.எஸ்.எம்.இக்பாலை, மீண்டும் அதிபராக நியமிக்கக் கோரி, மூன்றாவது நாளாக இன்று புதன்கிழமையும் (02) பெற்றோர் பாடசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோர், நேற்று (02) காலை பாடசாலையில் பொதுக் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் பதில் அதிபரும் புதிய பதில் அதிபரும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்;.

இக்கூட்டத்தில் கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி யாப்பாரத்ன கலந்துகொண்டிருந்தார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

'கல்வி அமைச்சின் செயலாளர், புதிய பதில் அதிபரை நியமித்துள்ளார். அதன்படி அவர் இங்கு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.  கலந்துரையாடலின் அறிக்கையை அமைச்சுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என்றார். பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னரும் பெற்றோரில் ஒரு குழுவினர், பாடசாலைக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

இப்பாடசாலையில் புதிய அதிபர் ஒருவரை நியமிக்கும்வரை, பதில் அதிபராக இக்பாலை மீண்டும் நியமிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .